What Is The Impact On Tamil Nadu: நாடு முழுவதும் மீண்டும் ஒருமுறை 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வரும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தால், மாநிலத்தில் சுயாட்சி என்னவாகும்? எந்தெந்த மாநிலங்களின் ஆட்சி பாதிக்கப்படும்? அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா? என்ற கேள்விகளுக்கான தீர்வை பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை


முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு, நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம் எனக்கூறி 18, 626 பக்கங்கள் கொண்ட தனது பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் சமர்ப்பித்தார்.


மோடி அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. மேலும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு


'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு திமுக, காங்கிரஸ் உட்பட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க - 'ஒரே நாடு ஒரே தேர்தல்' பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?


ஒரே நாடு ஒரே தேர்தல்' மாநிலங்களின் பங்கு என்ன?


'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், நான்கு முதல் ஐந்து இடங்களில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு தான். சிக்கல் வருகிறது. ராம்நாத் கோவிந்த் குழு அளித்த அறிக்கையில், இந்த சட்ட திருத்த மசோதாவை, நிறைவேற்ற மாநில அரசிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி உள்ளனர்.


பொதுவாக அரசியல் சாசனத்தில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றால், அதனை பாதிக்கு மேல் உள்ள மாநில சட்டமன்றங்களும் நிறைவேற்ற வேண்டும். அப்படித்தான் பல சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விவகாரத்தில் மாநில சட்டமன்றங்களில் ஒப்புதல் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது. 


நாடாளுமன்றத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மக்களவையிலும் சரி மாநிலங்கவையிலும் சரி சிம்பிள் மெஜாரிட்டியில் இந்த சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றினால் போதும் எனவும் கூறப்பட்டுள்ளது.


மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. இதேதான் பெரும்பான்மையான மாநில கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதாவது மாநிலத்தில் செயல்படுத்தக்கூடிய எந்த ஒருமுடிவையும், மாநில அரசின் அனுமதியுடன் தான் செயப்படுத்த வேண்டும் என்பதுதான் மாநில கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கிறது. 


ஆனால் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' விகாரத்தில் மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை எனக் கூறப்பட்டு இருக்கிறது.


மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடி


தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும் 


'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்ட திருத்தம் நிறைவேற்றிய அமலுக்கு வந்தால் என்ற தமிழகத்தில் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என்ற கேள்வியும் எழுகிறது. 


இந்த சட்ட திருத்தம் நிறைவேற்றிய பிறகு, ஒரு தேதியை அறிவிக்க வேண்டும். அந்த தேதியிலிருந்து அதுக்கு அடுத்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் தான் மாநில அரசின் ஆயுட்காலம் இருக்கும்.


உதாரணமாக தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அடுத்த சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் ஆண்டு வருகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நிறைவேற்றி 2025 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பகிறது என வைத்துக்கொண்டால்,  2006 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் தேர்தல் நடைபெற்று ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் பட்சத்தில், அந்த ஆட்சியோட ஆயுட்காலம் வெறும் மூன்று ஆண்டுகள் தான் இருக்கும். அதாவது 2026 லிருந்து 2029 வரை தான் இருக்கும். 


2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் 2029 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும். எனவே 2025 இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோட ஆயுட்காலம் வெறும் மூன்று ஆண்டுகள் தான் இருக்கும். 


எந்தெந்த மாநிலங்கள் பின்னடை சந்திக்கும்?


தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க நடக்கி இருக்கின்ற. இந்த ஐந்து மாநிலங்களுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும். 


அதேபோல 2027 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அந்த மாநிலத்துக்கும் பெரும் பின்னடைவாக இருக்கும். 


அதேபோல 2028 ஆம் ஆண்டு தெலுங்கானா, மத்திய பிரதேசம்,, ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் வர இருக்கிறது. 


எனவே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டு வந்தால், பல மாநில அரசு பெரும் பின்னடைவை சந்திக்கும்.


மேலும் படிக்க - 'ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது' - ஸ்டாலின் கொண்டுவந்த 2 தீர்மானங்கள் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ