சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி உட்பட 5 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலம், வேலூர், அரியலூர், சென்னை, திண்டுக்கல் ஆகிய  மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது.


அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி திண்டுக்கல் ஆட்சியராகவும், திண்டுக்கல் ஆட்சியராக இருந்த வினய், அரியலூர் மாவட்டத்திற்கு ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம், வேலூர் மாவட்ட ஆட்சியராகவும், தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த ராஜசேகர் மதுரை மாவட்ட ஆட்சியராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .


இசை பல்கலைக்கழக பதிவாளராக இருந்த சீதாலட்சுமி சென்னை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் ஆட்சியராக இருந்த ரோகிணி, இசை பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி உத்தரவை தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார்.


சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, சேலத்தில் பொருப்பேற்ற சில தினங்களிலேயே தனது அதிரடி செயல்பாடுகளால் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்தவர். ஆளும் கட்சிக்க ஆதரவாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார் எனவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இந்நிலையில் ரோகிணியின் பதவிமாற்றம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.