அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர், கமல்ஹாசன் வயது முதிர்வு காரணமாக அரசியலுக்கு வந்துள்ளதாகவும், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைதான் வரும் எனவும் கூறியிருந்தார். இவரின் இந்த கருத்துக்கு நடிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். 


இந்நிலையில், தமிழக அரசின் சாதனையை விளக்கும் வகையில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தொடர் ஜோதி நடைபயணம் மதுரையில் மேற்கொள்ளப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 30 லட்சம் மக்களை சந்தித்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஐந்து நாட்கள் இந்த நடைபயணம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக ஆட்சி குறித்து ஸ்டாலின் கூறி வரும் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்து, உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டார். 


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண பிரதமர் மோடியை நேரில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.