"படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது...?" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் வாயிலாக கேள்வி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது என்று அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று செய்வது வேறாக அதிமுக இரட்டை வேடம் போடுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 2,500 மதுக்கடைகளை மூடிய தமிழக அரசு அதே அளவுக்கு புதிய கடைகளை திறந்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்த அதிமுக அரசு, அதனை செயல்படுத்தும் வகையில் 1000 மதுக்கடைகளை மூடியது. இது தவிர உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த மேலும் 1,500 மதுக்கடைகளை மூடும் கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், ஜனவரி மாதம் வரையில் 5197 டாஸ்மாக் கடைகள் இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2000 கடைகள் திறக்கப்பட்டதாகவும் செய்தி வெளியானது. இந்நிலையில், இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு அறிவித்த  "படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது...?" என கேள்வி எழுப்பியுள்ளார். 



இது குறித்து அவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது... "கடந்த 3ஆண்டில் 2000-க்கும் மேலான #TASMAC புதிதாக திறக்கப்பட்டுள்ளன. மேலும் 200 கடைகள் திறக்கப்பட உள்ளனவாம்!


படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது?சட்டப்பேரவையிலும்,மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று; செய்வது வேறு என அதிமுக போட்டு வரும் இரட்டை வேடம் இது!" என குறிப்பிட்டுள்ளார்.