தமிழ் மொழியை வளர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உலகம் முழுவதும் தமிழ்மொழியை பரவலாக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 'ஆர்.லட்சுமி நாராயணன்' என்பவர்  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் கூறியதாவது:-


கேள்வி:-


கோடிக்கணக்கில் பணம் செலவழித்து உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி என்ன பயன்?


செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றிற்களா? 


முதல் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் 1-ம் நூற்றாண்டில் தோன்றியது என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. 


கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தமிழ் எழுத்துகள் தோன்றியதற்கு பல்வேறு ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.


புதுச்சேரி, அந்தமான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிஜி, மியான்மர், ஆப்பிரிக்கா, மாலத் தீவுகள், அமெரிக்கா என தமிழ் மொழி பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. 


ஆனால் நமது அண்டை மாநிலங்களில் இருப்பவர்களுக்கு தமிழ் மொழியின் அருமை தெரியவில்லை.


தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் அரசுக்கு உள்ளது.


உத்தரவு:-


தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அரசுகள் மட்டுமின்றி ஒவ்வொரு தமிழனும் தனது பங்களிப்பை கொடுக்க வேண்டும்.


மாநில அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 


தமிழ் மொழியை ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சிறப்பு சலுகைகள் வழங்கபட வேண்டும். 


தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளில் மொழி பெயர்க்க குறிப்பிட்ட நிதி ஒதுக்க வேண்டும்.


தமிழறிஞர்களை அங்கீகரித்து ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவுட்டுள்ளது.