சென்னை: மக்களின் பிரதிநிதிகள் கூடி மாநிலங்களுக்கான சட்டங்களை நிறைவேற்றும் இடமாக சட்டப்பேரவை இருக்கிறது. சட்டமன்றத்தையும் மேலவையையும் இணைத்துவிட்டதால் தற்போது அது தமிழ்நாடு சட்டப்பேரவை என்று அழைக்கப்படுகிறது.

 

தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது சட்டப்பேரவை (Tamil Nadu Legislative Assembly) அவசரமாக கூட்டப்படுகிறது. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை சட்டப்பேரவை கூட்டப்பட்டிருக்கிறது. அதுகுறித்து பார்ப்போம்.

 

2011 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக அவசர சட்டப்பேரவை கூடியது. டிசம்பர் 15ஆம் தேதி கூடிய அந்த கூட்டத்தில் முல்லைப் பெரியாறில் அணை கட்டக்கூடாது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 


 

2013ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இலங்கையில் நடத்தப்பட்டன

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றதை சுட்டிக் காட்டி அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டினார்.

 

அந்தக் கூட்டத்தில் தமிழர்கள் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளை புறக்கணிப்பது என்று முடிவானது.

 

2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. காளைகளை பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் ஒன்றிய அரசு இணைத்ததால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

 


 

அதனை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரையில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்றது. அதனை சரி செய்ய சிறப்புக் கூட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது என அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

 

2018ஆம் ஆண்டு மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்படுவதை எதிர்த்து அவசர சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதனைத் தொடர்ந்து நாளை ஐந்தாவது முறையாக சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை அரசு கூட்டியிருக்கிறது. நீட் விலக்கு தொடர்பான மசோதாவை ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பியிருப்பதால் அதுகுறித்து விவாதிக்க பேரவை கூடுகிறது. மீண்டும் மசோதா ஆளுநருக்கே திருப்பி அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR