இந்தியா எத்திசை நோக்கி செல்கிறது என்பதில் ஒவ்வொரு  இந்தியரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் (TDI) அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ஜனநாயகக் குறியீடு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா கடந்த ஆண்டை விட 10 இடங்கள் சரிவை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆண்டு தோறும் இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான 167 நாடுகள் அடங்கிய தரவரிசை மற்றும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


அதில், இந்தியா 2018-ல் இந்தக் குறியீட்டில் 7.23 புள்ளிகளுடன் 41 ஆவது இடத்தில இருந்தது. இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டில் 6.90 புள்ளிகளுடன் 10 இடங்கள் சரிந்து 51 ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா உள்ளிட்ட பல அரசியல் ரீதியிலான முடிவுகள் மற்றும் போராட்டங்கள், போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் போன்ற அதன் விளைவுகள் காரணமாக இந்தியா இந்த சரிவுக்கான காரணங்களாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்து ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், "ஜனநாயக குறியீட்டில் இந்தியா 10 இடங்களை இழந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகால நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்த எவருக்கும் ஜனநாயகம் அழிக்கப்பட்டு, ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன என்பது தெரியும். இந்தியா செல்லும் திசையை நினைத்து உலகமே திகைத்துள்ளது. தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 



மேலும், ஒரு ட்விட்டர் பதிவில்.. "தற்போதைய அதிகாரத்தில் இருப்பவர்கள் உண்மையான ‘துக்தே துக்தே’ கும்பல்" என குறிப்பிட்டுள்ளார்.