தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி பதில் தர மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

“தமிழகத்தில் எய்ம்ஸ் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்” என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


தமிழகத்தில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து, கோர்ட் உத்தரவை நிறைவேற்றாத மத்திய சுகாதார செயலர் பிரீத்தி சுதன் மீது, கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார்.


இந்நிலையில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி பதில் தர மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காலதாமதம் ஆவதற்கு காரணம் என்ன?, தமிழகத்தில் எங்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.