எப்போது அமலுக்கு வருகிறது சொத்து வரி உயர்வு? அறிவிப்பு வெளியானது!
ஆண்டின் பாதி வரை சொத்து வரி உயர்வு அமலுக்கு வராது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதில் சொத்து வரியானது 50 முதல் 250% வரை வரிஉயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டது.
இதனால் சொந்த வீட்டில் உள்ள மக்கள் வரியைக் கண்டும், வாடகை வீட்டில் உள்ள மக்கள் வாடகையை கண்டும் அஞ்சும் நிலை ஏற்பட்டது.
வீடுகளுக்கு மட்டுமல்லாமல் காலி மனைகளுக்கும் சொத்துவரி 100% உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.
இதையடுத்து பல்வேறு முன்னணி கட்சிகள் சொத்து வரி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் படிக்க | இனி எத்தனை சிம் வேணாலும் போட்டுக் கொள்ளலாம்! ஸ்மார்ட்போனில் புதிய புரட்சி!
இந்த அதிர்ப்திக்கு இடையில், இந்த வரி உயர்வு எப்போது அமலுக்கு வரும் என்று சந்தேகம் உள்ள நிலையில், சொத்து வரி உயர்வு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ‘‘உயர்த்தப்பட்ட சொத்து வரியானது முதல் அரையாண்டில் அமல்படுத்தப்படாது என்றும், 2022 - 2023 நிதியாண்டில் முதல் அரையாண்டுக்கு பழைய சொத்து வரியே பொதுமக்கள் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக எந்தத் தொகையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி மறு சீரமைப்பு செய்து 2-வது அரையாண்டில் புதிய சொத்து வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தினால், அவர்கள் செலுத்திய தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இன்பாக்ஸில் தேவையில்லாத மெயில்கள் வரமால் தடுப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR