தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
![தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்! தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2020/10/14/172050-tn-school.gif?itok=R7UuvQ21)
பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்தவொரு முடிவையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi K. Palaniswami) எடுப்பார் என்றும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனவும் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (K.A. Sengottaiyan) தெரிவித்திருந்தார்.
CHENNAI: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் இப்போது மீண்டும் திறக்கப்படாது, பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து எந்தவொரு முடிவையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி (Edappadi K. Palaniswami) எடுப்பார் என்றும், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை எனவும் பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் (K.A. Sengottaiyan) தெரிவித்திருந்தார்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பதூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 275 மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் நீட்டிப்பு சான்றிதழ்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் (K.A. Sengottaiyan) பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், , பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு தற்போது இல்லை. மாநிலத்தில் கொரோனா (COVID-19) பரவல் குறைந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆந்திராவில் (Andhra Schools) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் ஒரு சில மாணவர்களுக்கு கோவிட் -19 தொற்று ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிக்கையை கல்வி, வருவாய் மற்றும் சுகாதாரத் துறைகளால் தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பிறகு முதல்வர் அது குறித்து முடிவெடுப்பார் எனவும் அவர் கூறினார்.
ALSO READ | மாணவர்கள் நலன் கருதி பாடத்திட்டத்தை குறைக்கும் பணி நிறைவு: தமிழக அரசு
"பள்ளிகள் (School Reopening) மீண்டும் திறக்கப்படும்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும், அவை கண்காணிக்கப்படும்" என்று அவர் கூறினார்.
தமிழ்நாட்டில், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சிகளை சேனல்கள் மூலம் கற்றுக்கொள்ள முடியும். ஆன்லைன் கற்றலுக்கு அவர்களுக்கு மொபைல் போன்கள் தேவையில்லை. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் மொத்தம் 15.5 லட்சம் மாணவர்கள் அரசு நடத்தும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். ஏனென்றால், எங்கள் கல்வி முறைகள் சிறப்பாக மாறிவிட்டன என்று அவர் மேலும் கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR