"தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் முந்தைய அரசின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் "நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 120 பக்கம் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர்  வெள்ளை அறிக்கை  (white paper report) குறித்து அவர் கூறியது: கடந்த ஐந்து ஆண்டுகளில் 1.50 லட்சம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவானது வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதுபோக தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலை மீதும் ரூபாய் 2,63,976 கடன் உள்ளது.


கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டின் மறைமுக கடனானது ரூபாய் 39,079 கோடியாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் சுமையும் ரூபாய் 5,70,189 ஆக உயர்ந்துள்ளது.என நேற்று  நீண்ட நேரம் மிக விரிவாக குறிப்பிட்டார்.


ALSO READ | வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: முக்கிய அம்சங்கள் இதோ 


 நிதி அமைச்சர் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையினைப் பற்றி இன்று அது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில்  மக்கள் நீதி மையம் தலைவரும்,நடிகருமான "கமல்ஹாசன் அவர்கள் கஜானா காலி எனினும் சுரண்டல் சற்று தளர்வின்றி நடைபெறும் என்பதையே இவ்வறிக்கை விளக்குவதாக எனக்கு தோன்றுகிறது. என்றும் மேலும் அவர் தற்போது ஆளும் அரசு வெளியிட்டுள்ளது வெள்ளை அறிக்கை இல்லை! வேண்டுமானால் "மஞ்சள் கடிதாசி என்று வைத்துக் கொள்ளலாம். என காட்டமாக விமர்சித்துள்ளார்.!



இதற்கிடையில் வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 21 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்துள்ளார். "வேளாண் துறைக்கு என்று தனி பட்ஜெட்டும் அன்றைய தினம் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத் தக்கதாகும்.!


ALSO READ | TN Budget 2021-22: ஆக.13 முதல் செப். 21 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR