Mosquirix: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்
முதல் மலேரியா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது.
உலகளவில் மலேரியாவால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
முதல் மலேரியா தடுப்பூசியின் பரவலான பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது. 1880 ஆம் ஆண்டில், அல்போன்ஸ் லாவரன் முதன்முறையாக மலேரியா ஒட்டுண்ணியை கண்டுபிடித்த பிறகு, அதன் தடுப்பூசிக்கான தேடல் தொடங்கியது.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இது குறித்து கூறுகையில், கடந்த 1987ல் மலேரியா காய்ச்சலைத் தடுக்க மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் GLAXOSmithKline (GSK) நிறுவனம் உருவாக்கியது. அந்த தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்ததால், அதை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ALSO READ | Urinary Infection: பீர் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்! அற்புத வைத்தியம்
GLAXOSmithKline (GSK) தயாரித்த RTS, S/AS01 (RTS, S) மலேரியா தடுப்பூசியைப் பயன்படுத்த WHO பரிந்துரைக்கிறது. இந்த மலேரியா தடுப்பூசிக்கு Mosquirix என பெயரிடப்பட்டுள்ளது. உலகில் ஒவ்வொரு வருடமும் சுமார் 4 லட்சம் பேர் மலேரியா நோயால் இறக்கிறார்கள் என கூறப்படுகிறது. உலகளவில் மலேரியாவால் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை இறக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து கானா, கென்யா, மாலவி ஆகிய நாடுகளில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மேம்படுத்தப்பட்ட மலேரியா தடுப்பூசியை செலுத்தப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆப்பிரிக்காவை சேர்ந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவால் பாதிக்கப்படும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,60,000க்கும் அதிகமாக உள்ளது. இந்த மலேரியா தடுப்பூசியின் பயன்பாடு பல ஆயிரம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என தெரிவித்த. உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ( Dr.Tedros Adhanom Ghebreyesus) இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என கூறினார்.
Mosquirix எனப்படும் RTS,S/AS01 மலேரியா தடுப்பூசியின் 4 டோஸ் குழந்தைகளுக்கு வழங்கப்படும், முதல் மூன்று டோஸ் 5 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரை வழங்கப்படும் மற்றும் நான்காவது டோஸ் சுமார் 18 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கப்படலாம். இது இந்த வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மலேரியா நோய் தாக்கும் அபாயத்தை பெருமளவு குறைக்கும்.
மலேரியாவின் அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், தசை வலி, வியர்வை மற்றும் குளிர் போன்றவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read Also | வெரிகோஸ் வெயின் பாதிப்பா? கவலை வேண்டாம்! இதோ நிவாரணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR