தமிழ் புதல்வன் திட்டம்: யார் யாருக்கு மாதாமாதம் ரூ. 1000 கிடைக்கும்? - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Tamil Pudhalvan Scheme Details: கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்ற நிலையில், அங்கு மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையை இங்கு காணலாம்.
Tamil Pudhalvan Scheme Details: தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் தொடக்க விழா கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடங்கிவைத்த பின்னர் மேடையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "கல்லூரியில் நுழைந்தவுடன் நீங்க கொடுத்த எனர்ஜி வரவேற்பிற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். நேற்றிரவே வங்கி கணக்கில் பணத்தை போட உத்தரவிட்டேன். வந்துவிட்டதா, மகிழ்ச்சியா?" என மாணவர்களை நோக்கி விசாரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,"நாள்தோறும் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றி இருந்தாலும் ஒரு சில திட்டங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். அத்தகைய திட்டம்தான் இந்த தமிழ் புதல்வன் திட்டம். இந்த திட்டத்தை தொடங்குவதற்கு நான் தேர்ந்தெடுத்த இடம் கோவை. கோவை மக்கள் அன்பான மக்கள். பாசமான, சேவை மனப்பான்மையுடன் இருக்கும் மக்கள். தொழில் துறை, கல்விநிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதி. இந்த மக்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்" என கோவை மக்களுக்கு புகழாரம் சூட்டினார்.
518 கோடி முறை
மேலும் அவர்,"தமிழகம் இந்தியாவிற்கு முன்னோடி என செல்லும் அளவிற்கு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. பெண்கள் பொருளாதார விடுதலை பெறுவதும், இளைஞர்கள் கல்வி பெறுவதும் முக்கியமாகும். பொருளாதார விடுதலை என்றால் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 518 கோடி முறை பெண்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
3.28 மாணவர்களுக்கு பயன்
மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம் போல மாணவர்களுக்கானது தமிழ்புதல்வன் திட்டம். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். கலை அறிவியல், சட்டம், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். 3.28 லட்சம் மாணவர்களுக்கு 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தந்தை நிலையில் குடும்பத்தில் ஒருவாக இருந்து உருவாக்கபட்ட திட்டம்தான் தமிழ்புதல்வன்
173 ஆண்டுகள் பழமையானது இந்த கல்லூரி. இந்த கல்லூரி முதல்வர் ஒரு கோரிக்கை வைத்தார். விடுதி கட்டடம், கருத்தரங்கு கூடம் வேண்டும் என கேட்டு இருக்கின்றனர். மாணவிகளுக்கான விடுதி கட்டிட்டம், கருத்தரங்கு கட்டடம் அமைத்து கொடுக்கப்படும்" என்றார்.
இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என மாணவர்களுக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வழிவகை செய்திட வேண்டும் என்றும் கூறினார். கல்வி கற்க தடைகள் ஏதும் வந்தால் அதனை உடைத்தெறிந்து மாணவர்கள் அடுத்த கட்டம் நோக்கி செல்ல வேண்டும் என்றும் தடைகளை கடக்க தமிழ்நாடு அரசு உடன் நிற்கும் என்றும் தெரிவித்தார்.
வினேஷ் போகத் ஒரு முன்னுதாரணம்
மேலும், மாணவர்களிடம் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை உதாரணமாக எடுத்துக்கூறி, வினேஷ் போகத்தை போல் வாழ்வில் வரும் சோதனைகளையும், கஷ்டங்களையும் கண்டு சோர்ந்து போகாமல், வாழ்வை துணிச்சலுடன் எதிர்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு அரசு தமிழ் புதல்வன் திட்டம் குறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில்,"பொருளாதார வசதிக் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் பள்ளிப் படிப்பிற்குப் பின் உயர் கல்வியைத் தொடர முடியாத நிலையில் இருந்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேர உதவுகிறது. கல்லூரி செல்லும் மாணவர்களின் உள்ளங்களில் தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
கற்கும் ஆர்வத்தைப் பெருக்குகிறது. பெற்றோரின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கிறது. குடும்பங்களின் வளத்தை மேம்படுத்துகிறது. உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை இந்திய அளவில் மேலும் உயர்த்துகிறது" என குறிப்பிட்டிருந்தது.
மேலும் படிக்க | திராவிட மாடலுக்கு அடித்தளம் அமைத்தவர் கருணாநிதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ