மதுரை: மின் வாரிய ஊழியர்கள் வரும் 7 ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது எனவும் சுற்றறிக்கை மூலம் மின் வாரியம் உத்தரவிட்டது. ஆனால் இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை அடுத்து, டிசம்பர் மாதத்திற்கான சம்பளம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்ததோடு, மேலும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது என மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், "மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மின் பகிர்மான வட்டங்களில் பணபுரியும் அனைத்து ஊழியர்கள் கோவிட் தடுப்பு மருந்து முதல் மற்றும் இரண்டாம் தவணையினை வரும் டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் செலுத்திக் கொள்ளவேண்டும் என அறிவுருத்தப்படுகிறது.


அவ்வாறு தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ள தவறும் பட்சத்தில், அந்த ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என ஏற்கனவே நடந்த கலந்தாய்வு மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 


மேலும் அனைத்து பணியாளர்களும் தடுப்பு மருந்து செலுத்திக்கொண்டதற்கான விபர அறிக்கையை சமர்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல மதுரை மண்டல மின்வாரியத்தில் 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.


தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்ற தகவல் மூலம் மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பளம் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. விழிப்புணர்வு ஏற்படுத்தவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் டிசம்பர் மாதத்திற்கான சம்பளம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR