சென்னை: மத்தியில் 353 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அமைச்சரவையில் அதிமுக-வுக்கு இடம் கிடைக்கும் என்ற நிலையில், அதுவும் கிடைக்கவில்லை. தற்போது அனைவரின் கவனமும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பக்கம் திரும்பி உள்ளது. 


அதேவேலையில் தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதனால் பாஜக அமைச்சரவையில் இடம் இல்லாமல் போனது. அதேபோல 22 சட்டசபைக்கான இடைத்தேர்தலிலும் அதிமுக 9 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. 13 இடங்களில் தோல்வியை தழுவியது. 


இதன் காரணமாக நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி கிடைக்க வேண்டிய இடத்தில், தற்போது மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி மட்டும் கிடைக்கும். அதிலும் தேர்தல் கூட்டணி உடன்பாடு படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தரவேண்டும். மீதிமிருக்கும் 2 இடங்களில் ஒரு இடத்தை பாஜக கேட்பதாக தகவல்கள் கூறுகின்றன. அப்படி பார்த்தால், அதிமுகவிடம் ஒரே ஒரு இடம் தான் இருக்கும். ஒருவேளை பாஜக விட்டுக்கொடுத்தால், அதிமுகவிடம் இரண்டு இடங்கள் மீதமிருக்கும். 


அதிமுகவிடம் ஒரு இடம் இருக்குமா? அல்லது இரண்டு இடம் இருக்குமா? என்ற சூழ்நிலையில், அதிமுக கட்சியில் உள்ள சில மூத்த தலைவர்கள் தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். 


அதாவது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தரவேண்டும் என கோகுல இந்திரா, மைத்ரேயன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி மற்றும் அமைச்சரவையில் இடம் கிடைக்கததால் மாநிலங்களவை இடம் வேண்டும் என வைத்தியலிங்கமும் என சுமார் பத்து பேர் கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அன்வர் ராஜாவும் இணைந்துள்ளார்.


யாருக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி கொடுப்பது என்பது குறித்து முடிவு எடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் குழப்பத்தில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. அனைவரையும் சமாதனம் செய்யும் முயற்ச்சியிலும், அதேவேளையில் அனைவருடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் எனவும் கட்சி நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. காத்திருப்போம்....!!