இரட்டைஇலை யாருக்கு சொந்தம்- அக் 5 விசாரணை!
தமிழக முன்னால் முதல்வர் ஜெ. இறப்பிற்கு பிறகு, தமிழக மக்களை பரபரப்பினிலே வைத்திருக்கின்றது அதிமுக அரசு. தற்போதைய நிலைமையினில் அதிமுக கட்சி யார் வசம் உள்ளது என்பதினை யாராலும் யூகிக்க முடியாத நிலையில் தான் தமிழகம் இருக்கின்றது.
முன்னதாக கட்சியின் பெயரும், சின்னமும் தங்களுக்கு தான் சேர வேண்டும் என சசிகலா தலைமையிலான அணியினரும், துனைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனிடம் மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஆனால் பின்னர் இருதுருவங்களாக இருந்த இபிஎஸ் மற்றும் ஒபிஎஸ் அணியினருக்கு இடையே சமரசம் உண்டாகி இருஅணிகளும் இனைந்து தற்போது தினகரன் தரப்பினரை எதிர்த்து வருகின்றனர்.
இதனால் கட்சியின் பெயர், சின்னத்திற்கான உரிமைக்குரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை, இந்நிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவரின் மனு மீது மதுரை உயர்நீதிமன்றம் பிரப்பித்துள்ள உத்தரவு இதற்கான தீர்வினை விரைவில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாவது, அதிமுக கட்சியின் பெயரும், சின்னமும் யாருக்கு சொந்தம் என்பது பற்றி வரம் அக்டோபர் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் கமிஷன் இறுதி முடிவு எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த உத்தரவினைத் தொடர்ந்து தேர்தல் கமிஷன் வரம் அக்டோபர் 5-ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடத்தவுள்ளது.