இன்று நாட்டின் 72-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பிரதமர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் கொடி ஏற்றுகிறார். மாநிலத்தில் முதல் அமைச்சர்கள் கொடி ஏற்றுகிறார். ஆனால் இந்திய நாட்டில் முதலில் மக்களால் தேர்தேடுக்கப்பட்ட பிரதமர் மட்டும் தான் கொடி ஏற்றுவார். ஆனால் இந்திய மாநிலங்களில் மக்களால் தேர்தேடுக்கப்பட்ட முதல் அமைச்சர் கொடி ஏற்ற மாட்டார்கள், மாறாக ஆளுநர்கள் தான் கொடி ஏற்றுவார்கள். அது சுதந்திர தினமாக இருந்தாலும் சரி, குடியரசு தினமாக இருந்தாலும் சரி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களால் தேர்தேடுக்கப்பட்ட முதல் அமைச்சர் தான் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற உரிமையை அனைத்து மாநிலங்களுக்கும் வாங்கி தந்த பெருமை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை சாரும். ஆம், 1969 ஆம் ஆண்டு மத்திய அரசிடம் தான் அனைத்து முக்கிய அதிகாரங்கள் இருக்கிறது, மாநிலத்திற்கும் சுயாட்சி அதிகாரங்கள் வழங்க வேண்டும் என கூறி, இதைப்பற்றி ஆராய ராஜமன்னார் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு 1971 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது.



பின்னர் 1973 ஆம் ஆண்டு மாநிலத்துக்குச் சுயாட்சி மற்றும் தனிக்கொடி வேண்டும் எனவும், மக்களால் தேர்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தான் மாநிலத்தில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினார். மேலும் இதுக்குறித்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். கடிதத்தை அடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில், அம்மாநில முதல்வர்களே குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் அன்று தேசிய கொடி ஏற்றலாம் என அறிவிப்பை வெளியிட்டார்.


இதனையடுத்து தமிழகத்தில் முதல் முறையாக சென்னையில் உள்ள கோட்டையில் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றினார் அப்போதைய முதல் அமைச்சர் கருணாநிதி. 



இன்று இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களில் முதல் அமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி தான்.