சுர்ஜித் விரைவில் நலமுடன் மீட்கப்பட வேண்டுமென்பது ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., குழந்தை சுர்ஜித் விரைவில் நலமுடன் மீட்கப்பட வேண்டுமென்பது அவரது குடும்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் விருப்பமாகும் அவர்களது துயரில் நாமும் பங்கேற்போம்


அரசு இயந்திரம் விரைவாகச் செயல்பட்டு அந்த குழந்தையை மீட்பதோடு, தமிழகத்தில் இதுபோன்ற விபத்துக்கள் நடப்பது இது முதல் முறையல்ல என்று சொல்லும் வகையில் தொடர்ச்சியாக நிகழும் இதுபோன்ற மனம் பதைக்க வைக்கும் நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடும் வகையில் நெறிமுறைகளை உருவாக்கி அதனை அரசு இயந்திரம் கடுமையாக கண்காணிக்க வேண்டுமென்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 19 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.


எனினும் இதுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சுர்ஜித் விரைவில் நலமுடன் மீட்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.