சிவகங்கை வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏன்?- KSஅழகிரி விளக்கம்!
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்!!
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்!!
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே பதவி என ராகுல் காந்தி முடிவு எடுத்துள்ளதால் தான் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கமளித்துள்ளார். சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் வேட்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “எங்கள் கூட்டணியின் செயல்பாடுகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கின்றது, பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில் பெரும் ஆதரவை மக்கள் அளித்து வருகிறார்கள்.
சிவகங்கை வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார். குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு என ராகுல் முடிவு எடுத்திருக்கிறார். அதனாலேயே சில தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை, மீதமுள்ள தொகுதிகளுக்கும் இன்று வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும். ராகுல்காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்ட தலைவர்கள் விரைவில் பிரசாரத்திற்குத் தமிழகம் வருகின்றனர்.
அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களது வெற்றி சூறையாடப்படும், நாற்பது தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெரும்” என்று கே.எஸ். அழகிரி கூறினார்.