மறைந்த கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் உச்சம் தொட்டதுபோல் அரசியல் வாழ்க்கையில் அதிரடியாக முன்னேறினார். அவர் முதன்முதலாக சட்டமன்ற தேர்தலை சந்தித்தது 2006-ல் தான். கேப்டன் விஜயகாந்த் 2005-ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கினாா். தொடா்ந்து, 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை தனித்து சந்தித்தாா். அப்போது, திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான் என்று கூறி தமிழ்நாடு எங்கும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு மக்கள் அலைகடலென திரண்டு வந்தார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவருக்கு வரும் கூட்டத்தையும், மக்கள் மத்தியில் கிடைத்த ஆதரவையும் பார்த்த மிகப்பெரிய திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவுக்கே வியப்பாக இருந்தது. இதனால் அரசியல் களத்தில் கடும் நெருக்கடிகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. 2006ல் திமுக மற்றும் அதிமுக மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. திமுக கூட்டணியில் பாமக இடம்பெற்றிருந்தது. அந்தக் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் இடையே அப்போது ஏகபோக முட்டல் மோதல் இருந்தது. நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது, அவர்கள் அரசியலுக்கு வந்து எதையும் சாதிக்க முடியாது என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை பாமக வைத்துக் கொண்டிருந்தது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருந்த விஜயகாந்தை இந்த விமர்சனம் சீண்டுவது போல் இருந்தது.


மேலும் படிக்க | 24 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!


உடனே பாமகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பாமகவுக்கு அதிக செல்வாக்கும் இருக்கும் தொகுதியிலேயே நின்று வெற்றி பெற்று காட்டுகிறேன் என சவால் விடுத்தார் விஜயகாந்த். திமுக மீதும் கடும் அதிருப்தியில் இருந்த விஜயகாந்த், இதனை ஒரு சவாலாகவே பார்த்து வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பிலும் இருந்தார். இதற்காக அவா் தோ்ந்தெடுத்த தொகுதிதான் விருத்தாசலம். பாமகவின் கோட்டை எனக் கருதப்பட்ட கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. 


அந்த தேர்தலில் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த விஜயகாந்த், அடுத்த சட்டமன்ற தேர்தலியேயே எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். அத்துடன் தமிழகத்தின் மூன்றாவது எதிர்க்கட்சி தேமுதிக என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஆனால் 2006 -ல் விருத்தாசலம் தொகுதியை விஜயகாந்த் தேர்ந்தெடுத்தது ஏன்? என்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. விஜயகாந்த் கடவுள் பக்தி கொண்டவர். அவருடன் அப்போது, இணைந்து தோ்தல் பணியாற்றியவா்கள் கூறும்போது, அவருக்கு எண் 5 ராசியாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 5 கோபுரங்களைக் கொண்ட கோயில் விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரா் கோயில்தான். எனவே, தனது ராசிக்கான ஊராக இதை விஜயகாந்த் கருதியதாக விளக்கம் அளித்தனா். 


மேலும் படிக்க | தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ