செந்தில் பாலாஜி வெளியே வருவார்... அசுர நம்பிக்கையில் திமுக -காரணங்கள் இதுதான்...!
Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் திமுக இருக்கிறது.
Senthil Balaji : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிறை சென்ற செந்தில் பாலாஜி, ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என வரிசையாக முறையிட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க அமலாக்கத்துறை தரப்பில் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன்கோரி தொடர்ச்சியாக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன்தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அண்மையில் வேகமெடுத்தது. நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் வழக்கு விசாரணை குறித்து அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக் கைதியாகவே செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் அது குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக கூறினர். மேலும், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையையும் நிராகரித்தனர்.
செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணையை எப்போது தான் தொடங்குவீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மூன்று மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படும் என அமலாக்கத்துறை கொடுத்த பதிலை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது இம்முறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்றே அவரது தரப்பு வழக்கறிஞர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
ஏனென்றால், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் நீதிபதிகள் அபய் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகியோர் உபா வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருக்கின்றனர். அத்துடன் தடைசெய்யப்பட்ட பிஎப்ஐ அமைப்பினருக்கு வீட்டை வாடகைக்கு விட்ட புகாரில் கைது செய்யப்பட்ட ஒருவர் உபா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டனர். இதனால், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் ஜாமீன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ரூ.525 கோடி நிதி மோசடி வழக்கு: தேவநாதன் அதிரடி கைது - அடுத்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ