DMK Vs AIADMK: அதிமுக ஆட்சியை கேலி செய்யும் திமுக-வினர் - காரணம் இதுதான்
அரசுப் பணத்தில் வீண் விளம்பரம் தேவையில்லாதது என்ற நோக்கத்தில், தங்கள் கட்சியை சேர்ந்தவர்களின் புகைப்படங்களை அறிவிப்புகளில் இடம்பெறுவதை திமுக அரசு தவிர்த்து வருகிறது.
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்புகளை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிட்டப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவை சேர்ந்த ஒருவரின் படங்களும் இடம்பெறவில்லை. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இதேபோன்று அ.இ.அ.தி.மு.க சார்பில் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட விருது அறிவிப்புகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படமும், அந்நாளில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி படமும் இடம்பெறுவது வழக்கம். ஆனால் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெற்று ஆட்சி அமைத்து மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, விருது, நிதியுதவி மற்றும் மக்களுக்கான நலத்திட்டங்களை குறித்து அறிவிப்பை வெளியிடும் போது, அரசுப் பணத்தில் வீண் விளம்பரம் தேவையில்லாதது என்ற நோக்கத்தில், தங்கள் கட்சியை சேர்ந்தவர்களின் புகைப்படங்களை அறிவிப்புகளில் இடம்பெறுவதை தவிர்த்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி டாக்டர் எஸ். ராதகிருஷ்ணனின் பிறந்த நாளை நாடு முழுவதும் "ஆசிரியர் தினமாக" (Teachers day) கொண்டாடப்படுகிறது. இதேநாளில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் கல்வியில் சிறந்த தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதகிருஷ்ணன் விருது" வழங்குவது வழக்கம். 2020 - 2021 ஆம் கல்வியாண்டில் மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை வழங்கியது தமிழ்நாடு அரசு. அதில் டாக்டர் எஸ். ராதகிருஷ்ணன் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வாக்குறுதியை நிறைவேற்றுவது தான் எங்கள் லட்சியம்: முன்னாள் அமைச்சருக்கு முதல்வர் பதில்
அதேபோல பள்ளி புத்தகப் பையில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படனகுள் இடம் பெற்றிருந்தது. அவர்களின் படத்தை நீக்கினால் அரசுக்கு ரூ. 13 கோடி வரை செலவாகும் என்தால், எதற்கு வீண் செலவு, இந்த பணத்தை கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு பயன்படுத்தலாம் எனக்கூறியது பலரின் பாராட்டை பெற்றது.
தமிழக அரசின் இந்த செயல்பாடுகளை பாராட்டி சமூக ஊடகங்களில் திமுக-வினர் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேநேரத்தில் முந்தைய அரசான அதிமுக-வை கேலி செய்யும் வகையில் பதிவுகளும் போட்டு வருகின்றனர்.
ALSO READ | 100 நாட்கள் நிறைவு! சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் - முதல்வர் MKS உறுதி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR