கருணாஸ் பேசியதற்கு ஸ்டாலின் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்... "ஊழல் சாம்ராஜ்யத்தின் தலைமையிடமே திமுக தான், ஆனால் தற்போது ஊழல் குறித்து அவர்கள் நியாயம் பேசி வருகின்றனர். 


திமுக குடும்பத்தின் சொத்து மதிப்பு ரூ.40,000 கோடிக்கு மேல் உள்ளது. இவ்வளவு சொத்து எப்படி வந்தது? ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பம் என்றால் அது ஸ்டாலின் குடும்பம் தான். காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இருந்தபோது தான் நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நடைப்பெற்றுள்ளது. திமுக கட்சியினரே எல்லாம் செய்துவிட்டு தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து கருணாஸ் அவர்களின் சர்ச்சைக்குறிய பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில்... "கருணாஸ்க்கு நாக்கில் சனி பிடித்துள்ளதாகவும், அதற்கான விளைவுகளை அவர் விரைவில் சந்திப்பார். பிரியாணி கடை தகராறு, விமானத்தில் தகராறு என ஓடி ஓடி பஞ்சாயத்து செய்யும் ஸ்டாலின் இந்த விவகாம் குறித்து இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் மின்துறை ஊழல் தொடர்பாக ஸ்டாலின் அமைச்சர் தங்கமணிக்கு சவால் விட்டுள்ளார். எங்களுக்கு எதிராக ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் குறித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை" என தெரிவித்துள்ளார்.