திருநெல்வேலி மாநகரில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்ல தினந்தோறும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசு பேருந்தில் பயணித்து வருகிறார்கள். ஆனால் சமீப நாட்களாக, பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகவும், அவ்வாறு இயக்கப்படும் ஒரு சில பேருந்துகள் பேருந்து நிறுத்ததில் நிற்காமல் செல்வதாகவும் மாணவ, மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கட்டணமில்லா பேருந்து, சாதாரண கட்டண பேருந்துகள் சொர்ப அளவில் பள்ளி கல்லூரி நேரங்களில் விடப்படுகிறது. குறிப்பாக நெல்லை - தென்காசி, நெல்லை - ஆலங்குளம், ராஜவல்லிபுரம்,  தாழையுத்து, தென்கலம், செழியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே இயக்கப்படும் பேருந்துகளும் போதிய அளவில் இயக்கப்படுவது இல்லை என்ற ஆதங்கமும் பயணிகள் மத்தியில் உள்ளது.


மேலும் படிக்க: ஈரோடு: ஓட்டுக்கு திமுக பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள் - எடப்பாடி பழனிசாமி


நெல்லை காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ராணி அண்ணா கல்லூரி மாணவிகள்,பேரூந்து வசதி இல்லாததால் கிடைத்த பேரூந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கப்படியே பயணம் செய்த காட்சி காண்போரை காண்கலங்க செய்தது.


பெண்களுக்கு பயணம் செய்ய கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம் என பெண்கள் பயன்பெறும் திட்டங்களை கொண்டு வந்த அரசு, பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டும் பயணம் செய்ய கூடுதல் பேருந்து பள்ளி, கல்லூரி வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என நெல்லை மாணவ, மாணவியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்க: சென்னையில் தாழ்தள பேருந்துகள்: சென்னை உயர் நீதிமன்றம் கூறியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22