விரைவில் நாடாளுமன்ற தேதிகள் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி தனித்து களம் காண்கிறது. அண்ணாமலை, அதிமுக மீது தொடர்ச்சியாக வைத்த விமர்சனங்கள் காரணமாக அக்கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இது பாஜக டெல்லி மேலிடத்துக்கு பிடிக்கவில்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என இந்த நிமிடம் வரை விருப்பம் தெரிவித்து வருகிறது. பல்லடம் மற்றும் சென்னை என இரண்டு பொதுக்கூட்டங்களுக்கு வந்த பிரதமர் மோடி, திமுகவை கடுமையாக விமர்சித்தாறே தவிர அதிமுக பற்றி ஒரு வார்த்தை விமர்சிக்கவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கொங்கு மண்டலத்தில் பாஜக கொடி பறக்குது, இந்த 5 தொகுதிகள் கன்பார்ம் - அண்ணாமலை


குறிப்பாக பல்லடம் பொதுக்கூட்டத்தில் அதிமுகவின் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை வானுயர புகழ்ந்து பேசினார் பிரதமர். அதன்பிறகும் கூட பாஜக கூட்டணியில் இனி இணைய வாய்ப்பே இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அதற்கு காரணம், தங்களுடைய வாக்குகள் பாஜகவுக்கு செல்வதை புரிந்து கொண்டு அதிமுக இந்த முடிவை எடுத்துவிட்டது. எதுவாக இருந்தாலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு அதிமுக தலைமை வந்துவிட்டது. இதனை ரசிக்காத பாஜக மேலிடம், அதிமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றியதற்காக அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கிறது.


அதேநேரத்தில், அதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால் அண்ணாமலை வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்கிறது பாஜக மேலிடம். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துவிட்டது என்று சொல்கிறீர்கள் தானே, அப்போது தேர்தலில் போட்டியிட்டு வெல்லுங்கள் என அண்ணாமலைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் அமித்ஷா. ஆனால், எதார்த்தத்தை தெரிந்து வைத்திருக்கும் அண்ணாமலை, சாக்குபோக்கு சொல்லி தேர்தலில் போட்டியிடாமல் தப்பிக்க பார்க்கிறாராம். 


ஒருவேளை போட்டியிட்டு தோல்வி அடைந்தால் தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற பொறுப்பு கையை விட்டு போவதுடன் அரசியல் வாழ்க்கையும் அஸ்தமனத்துக்கு சென்றுவிடும் என்பது தான் அவருக்கு இருக்கும் அச்சமாம். 2024 தேர்தலில் போட்டியிடாமல் தப்பித்து விட்டால் அடுத்து தமிழ்நாட்டுக்கு 2026 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் வரை தமிழ்நாடு பாஜக தலைவர் என்ற மாநில பொறுப்பை தக்க வைத்துக் கொண்டு அரசியல் செய்யலாம். அப்போது அரவக்குறிச்சியில் வெற்றி பெற்றால் எம்எல்ஏ என்ற பொறுப்புடன் மாநில அரசியலில் கோலோச்சலாம், மீண்டும் தோற்றால் அடுத்து என்ன செய்யலாம் என அன்றைய அரசியல் சூழலை வைத்து முடிவெடுக்கலாம் என நினைக்கிறாராம் அண்ணாமலை. 


ஆனால், அண்ணாமலையின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பாகவே இருக்கிறதாம் டெல்லி பாஜக மேலிடம். அண்ணாமலை கட்டாயம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமித்ஷா கூறுகிறாராம். ஆனால், தான் போட்டியிடவில்லை, எல்லா தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்கிறேன், கட்சிப் பணியில் முழு கவனத்தையும் செலுத்துகிறேன் என அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறாராம் அண்ணாமலை. இதில் அமித் ஷா மற்றும் பிரதமர்  மோடி என்ன முடிவெடுக்கப்போகிறார்கள்? என்ற கலக்கத்தில் இருக்கும் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக வேட்பாளர் பட்டியலை எல்லோரையும் போல் அவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.


மேலும் படிக்க | திமுகவின் வெற்றி பார்முலா... திருமா ஓகே சொல்ல என்ன காரணம்? - முழு விவரம் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ