புதுடெல்லி: பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் மரபுவழி விளையாட்டாக ஜல்லிக்கட்டு நடத்தப் பெறுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிகட்டை ஏறுதழுவல் அல்லது மஞ்சு விரட்டு எனவும் அறியப்படுகிறது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில் பெறுகின்றன.


ஏன் ஜல்லிக்கட்டு ஒரு சர்ச்சைக்குரிய விளையாட்டாக இருக்கிறது?


சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை கூண்டிலடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக்கூடாதென்பது சட்டம். இதில் கடந்த 2011 சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒரு திருத்தம் செய்து, காளைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்தார்.


2011 ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. 


2014-ம் ஆண்டு காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது. 


இதன் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு தமிழகத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.