சென்னை: முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் நேற்று ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.


ஜெயலலிதாவின் உடல் இந்து முறைப்படி நேற்று எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிராமண இனத்தைச் சேர்ந்தவர். பொதுவாக பிராமணர்கள் இனத்தில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரது உடல் எரித்து விடும் சம்பிரதாம். இந்த சம்பிரதாயத்துக்கு மாறாக ஜெயலலிதா வின் உடல் நேற்று எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இதையடுத்து ஜெயலலிதா உடல் ஏன் தகனம் செய்யப்பட வில்லை என்ற கேள்வி எழுந்தது. அதற்கு சில காரணங்கள் கூறப்படுகிறது.


ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டதற்கு நினைவிடம் ஏற்படுத்த வேண்டும் என்று கட்சியின் முடிவு என கூறப்படுகிறது. 


எனினும் சிலர் ஜெயலலிதா வழிகாட்டியான எம்ஜிஆர் உடல் புதைக்கப்பட்டதார் ஜெயலலிதாவின் உடலும் அங்கு புதைக்கப்பட்டது என்று கூறுகின்றனர். 


ஜெயலலிதா அவர்களின் உடல் அடக்கம் செய்த காரணத்தால் சம்பிரதாய ரீதியாக சந்தனப் பேழைக்குள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


ஜெயலலிதா உடல் புதைக்கப்பட்டதுக்கு மற்றொரு காரணம் என்னவென்றால் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய எந்த ரத்த உறவும் இல்லை என்பது என்றும் கூறப்படுகின்றது.


அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில்தான் அதிமுக முடிவுபடி ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது.