சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக வேளாண்மைத் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது. 2021-2022 நிதியாண்டுக்கான, பொது பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகஸ்ட் 13-ம் தேதி தாக்கல் செய்வார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதையடுத்து, அதற்கு அடுத்த நாள் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தனது துறைக்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். 


தமிழக அரசின் தேர்தல் அறிக்கையிலேயே இதற்கான உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, கடந்த ஜூன் 21-ம் தேதி, சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் அதை உறுதி செய்தார். அதன்பிறகு, விவசாயிகளின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்பதற்கான கலந்தாலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.


Also Read | ஆகஸ்ட் 13ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது


பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இறுதியாக கடந்த நான்காம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான ஆலோசனையில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இந்த நிதியாண்டில் இருந்தே அமல்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டது. 


அதையடுத்து வேளாண்துறை பட்ஜெட் ஆகஸ்ட் 14ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அதற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 13-ம் தேதி பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். 


இதற்கு முன்பாக ஆந்திரப்பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது வேளாண்துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  அதன் பிறகு வேளாண் துறைக்காக தனி பட்ஜெட் தாக்கம் செய்வது தமிழக அரசு தான்.


வேளாண்துறைக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான காரணம் என்ன? இந்தியா விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு. இந்தியாவின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பொது பட்ஜெடைத் தவிர ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அப்போதே வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் வேண்டும் என்று ஆலோசனைகள் நடைபெற்றன.


Also Read | TN Budget: தமிழக பட்ஜெட் வெள்ளை அறிக்கையில் என்ன தகவல் இருக்கும்?


விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டில் அதற்கென தனி பட்ஜெட் இருப்பது சரியாக இருக்கும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையும் அப்போது சில பல காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால் வேளாண் துறைக்காக பிரத்யேக பட்ஜெட் தேவை என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்துவருகிறது.


மத்திய அரசு பட்ஜெட்டில் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்டை எப்போது கொண்டு வரும் என்று தெரியாது. ரயில்துறைக்கென பிரத்யேகமாக இருந்த பட்ஜெட்டும் தற்போது ரத்து செய்யப்பட்டு, அதுவும் பொது பட்ஜெட்டிலேயே இணைக்கப்பட்டுவிட்ட நிலையில், வேளாண் துறைக்கென மத்திய அரசு தனி பட்ஜெட் தாக்கல் செய்யுமா என்பது கேள்விக்குறியாகிவிட்டது.


இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கும் திமுக அரசு, முதன்முதலாக வேளாண் பட்ஜெட்டை அறிமுகம் செய்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும், குறிப்பாக விவசாயத்துறையினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


Also Read | தமிழக இடைக்கால பட்ஜெட் 2021: பல முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு


வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தேவை என்ற கோரிக்கையை பல ஆண்டுகளாக முன் வைத்து வரும் பாமக, கடந்த 14 ஆண்டுகளாக, வேளாண் துறைக்கென நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது. விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தனி பட்ஜெட் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது பாட்டாளி மக்கள் கட்சி.


அரசுக்கு ஆலோசனை கூறும் விதமாக, மாநில அரசு பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்னரே, வேளாண் துறைக்கென நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறது.   


தமிழக சட்டசபை தேர்தலில் போது, திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதோடு, ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும்.கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் வழங்கப்படும். கூட்டுறவு வங்கியில், விவசாயிகள் பெற்ற பயிர்கடனை, அரசே ஏற்று செலுத்தும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. 


தனது தேர்தல் வாக்குறுதிகளை திமுக ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


Also Read | PMK: 2021 - 2022ஆம் ஆண்டின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR