வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி திருமணம்..! மகளின் காதலன் வீட்டை உரு தெரியாமல் சிதைத்த குடும்பம்!
Viral News In Tamil: தனது மகளின் காதலன் வீட்டை அடித்து நொறுக்கிய பெற்றோர். திருமணம் செய்து கொண்ட ஜோடியை தேடும் காக்கி சட்டை. . என்ன தான் நடந்தது தெரிந்துக்கொள்ளுங்கள்.
தமிழ்நாடு செய்திகள்: பல ஆண்டுகளாக காதலித்து வந்த காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தால் ஒரு வீடே சூறையாடப்பட்டுள் உள்ளது. வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் சேதப்படுத்தப்பட்ட நிலையில் பீரோவில் வைத்திருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் திருடிச் சென்றதாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த காதலனின் பெற்றோர்கள்.
தேனி மாவட்டம் பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மணி- இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம்குமார், ரகுகாந்தி, ராகவன் என மூன்று மகன்கள் உள்ளனர். இதில் இரண்டாவது மகனான ரகு காந்தி படிப்பை முடித்துவிட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவர் கூழையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ஜனனி உத்தம பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை முதல் ரகு காந்தியை காணவில்லை. இதனால் அவரை அவரது பெற்றோர் தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காணாமல் போன ரகு காந்தி தனது முகநூல் பக்கத்தில் திருமண கோலத்தில் ஜனனியுடன் புதிய புகைப்படங்களை வெளியிட்டார். அப்போது தான் ரகு ஜனனி என்ற பெண்ணை காதலித்தது தெரியவந்தது.
மேலும் படிக்க - ரவுடி அப்பளம் ராஜா-வை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்! பின்னணி என்ன?
முகநூலில் புகைப்படத்தை கண்ட ஜனனியின் பெற்றோர்கள் தன் உறவினர்களுடன் ரகு காந்தி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை பார்த்து வீட்டில் உள்ள மின்விசிறி, தொலைக்காட்சி, கட்டில், ஜன்னல் கண்ணாடி, கதவுகள், பிரிட்ஜ் மற்றும் சமையல் எரிவாயு அடுப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தி பீரோவில் வைத்திருந்த ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயையும் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
வாசலில் இருந்த சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். வெளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்த ரகுவின் தந்தை மணி தனது வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் தலைமறைவாக இருக்கும் ஜனனி மற்றும் ரகு காந்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். ரகு காந்தியின் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக ராஜா, கீதா மற்றும் அவர்களது உறவினர்களையும் காக்கி சட்டை தேடி வருகிறது.
காதலனின் வீட்டுக்கே இந்த நிலைமை என்றால், இந்த ஜோடி அவர்கள் கையில் கிடைத்தால் என்னவாகும் என ரகு காந்தியின் உறவினர்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க - குழந்தைக்கு தந்தை யார் ? 3 பேரை காதலித்த பட்டதாரி தூத்துக்குடி பெண்ணின் அவல நிலை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ