Seeman News: நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரை 2012 ஆம் ஆண்டே வாபஸ் பெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என விளக்கம் அளிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.


அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011 ஆம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீசார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ளார்.


திமுக அரசுக்கு எதிராகவும், திராவிட கொள்கைக்கு எதிராகவும் கருத்துக்கள் கூறி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும், 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை, 12 ஆண்டுகளுக்கு பின், அரசியல் உள்நோக்கத்துடன் மீண்டும் விசாரிப்பதால், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.


மேலும் படிக்க- ரூ.50,000 கொடுத்த சாட்டை துரைமுருகன்... இந்த போர் முடியாது - மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜயலட்சுமி!


இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, 2011ல் அளித்த புகாரை 2012 ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில், 2023ல் புதிதாக புகார் அளித்து, அதுவும் ஒரு மாதத்தில் வாபஸ் பெறப்பட்டு உள்ளதாகவும், ஆனால் இதுவரை காவல்துறை தரப்பில் புகார் சம்பந்தமான நகல் தரப்படவில்லை. அதனை வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறை சார்பில், புகார் மனுக்களை சமர்பிப்பதற்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. 


இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மனு நகலை வழங்க வேண்டும் எனவும், விஜயலட்சுமி அளித்த புகார் மற்றும் வாபஸ் பெற்ற விவரங்களை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். குறிப்பாக, 2011ல் அளித்த புகார்  வாபஸ் பெறப்பட்ட நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன் என்றும் பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையை வரும் செப்டம்பர் 26 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.


மேலும் படிக்க- விசாரணைக்கு ஆஜரான சீமான்... விஜயலட்சுமி புகார் குறித்து முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ