சென்னை அடுத்துள்ள ஆவடி அடுத்த மேட்டு தும்பூரில் செங்கல் சூளை இயங்கி வருகிறது.இந்த செங்கல் சூளையில் விழுப்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் தனது மனைவி விஜயலட்சுமியுடன் தங்கியிருந்து 15 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணன் குடித்து விட்டு வந்து வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கிறார். இன்று மாறும் நாளை மாறும் என நினைத்துக் கொண்டே 15 வருடங்களாக கணவருடன் நாட்களை கடத்தியிருக்கிறார், விஜயலட்சுமி. பல முறை குடித்துவிட்டு வாய் சண்டையோடு முடியாமல் மனைவியை அடித்தும் கொடுமை படுத்தி வந்திருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான விஜய லட்சுமி வேறு வழியில்லாமல் பொறுமையாக வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதேதான் நிகழந்தது. ஆனால் அதில் இன்னொரு பயங்கரமும் ஒருசேர அரங்கேறியது. தலை நிற்காமல் குடித்துவிட்டு வந்த கிருஷ்ணன், வழக்கம்போல கத்தி கூச்சலிட்டிருக்கிறார். அதை தட்டி கேட்ட மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற விஜயலட்சுமி கையில் செங்கல்லை எடுத்திருக்கிறார். குடிபோதையில் புத்தி மாறிப்போன, கிருஷ்ணனை செங்கல்லால் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.



இதில் தலையில் படுகாயமடைந்து கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே விஜயலட்சுமி அங்கிருந்து தப்பியோடினார். இதுபற்றி தகவலறிந்த முத்தாபுதுபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் படிக்க | யுபிஎஸ் வெளிச்சத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த அவலம் !


தொடர்ந்து சம்பவம் குறித்து கிருஷ்ணனின் தம்பி ஆதிமூலம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விஜயலட்சுமியை கைது செய்தனர். இதனையடுத்து விஜயலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கணவரை மனைவியே செங்கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | சினிமா பாணியில் ஸ்கெட்ச் செய்து கொலை! பழிக்கு பழி வாங்கிய தம்பி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR