சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்களது 160-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், சென்னையில் மரியாதை செலுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது., அ.தி.மு.க யானை பலத்துடன் கூடிய கூட்டணியை அமைக்கும், புதிதாக அமையும் மத்திய அரசில் அ.தி.மு.கவின் பங்கு நிச்சயமாக இருக்கும் என தெரிவித்தார்.


மத்தியில் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது, அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கருத்துப்படி இந்த இரு கட்சியுடனே கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. தற்போது திமுக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருப்பதால், பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.


செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் விமர்சித்திருப்பது சரியானது தான் என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அ.தி.மு.க கூட்டணியில் கமலுக்கு இடம் அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என பதில் அளித்துள்ளார்.


மேலும் அ.தி.மு.க-வின் அரசியல் எதிரிகள் என பட்டியலிட்டால் அது தி.மு.க., அ.ம.மு.க மட்டுமே என தெரிவித்துள்ளார். வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையில் தான் போட்டி எனவும் அவர் தெரவித்துள்ளார்.