டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் - ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்பு

Brian Lara ; டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு எந்தெந்த அணிகள் செல்லும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கணிப்பை தெரிவித்துள்ள நிலையில், பிரைன் லாராவின் கணிப்பு எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : May 28, 2024, 06:03 PM IST
  • ஜூன் 1 ஆம் தேதி முதல் 20 ஓவர் உலக கோப்பை
  • இம்முறை உலக கோப்பை வெல்லும் அணிகள் எது?
  • அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் செல்லுமாம்
டி20 உலக கோப்பை : அரையிறுதிக்கு அந்த கத்துக்குட்டி அணி செல்லும் - ஜாம்பவான் லாராவின் காமெடி கணிப்பு title=

ஐபிஎல் கிரிக்கெட் முடிந்த கையோடு டி20 உலக கோப்பை திருவிழா ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகள் இணைந்து இம்முறை உலக கோப்பையை நடத்துகின்றன. இதில் பங்கேற்கும் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் நியூயார்க் சென்றடைந்துவிட்டது. விராட் கோலி, ரிங்கு சிங் ஆகியோர் மட்டும் இன்னும் ஓரிரு நாட்களில் அமெரிக்கா சென்று இந்திய அணியுடன் இணைய இருக்கின்றனர். அநேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் அவர்கள் புறப்படுகின்றனர். இந்த சூழலில் இம்முறை உலக கோப்பையை வெல்லும் அணிகள் குறித்த கணிப்பை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் தெரிவித்துள்ளனர். அதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாராவின் கணிப்பு எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருகிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம் 2025... சாம்பியன் கேகேஆர் கழட்டிவிடப்போகும் 5 பிரதான வீரர்கள்

லாரா தன்னுடைய கணிப்பில்  இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியுன் அரையிறுதிக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கணிப்பு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் சர்பிரைஸாக இருக்கிறது. லாரா இதுகுறித்து பேசும்போது, பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என சரிசமவிகிதத்தில் ஆப்கானிஸ்தான் அணி இருப்பதாக தெரிவித்துள்ளார். குருபாஸ், ரஷித்கான், முகமது நபி, நூர் முகமது ஆகியோர் பல நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி நல்ல அனுபவம் இருப்பதாகவும், அதனால் அவர்கள் 20 ஓவர் உலக கோப்பையில் மிகச்சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பல அணிகளுக்கு அவர்கள் அதிர்ச்சி கொடுத்து தோற்கடிக்கவும் வாய்ப்பள்ளதாக லாரா தெரிவித்துள்ளார்.

லாராவின் விளக்கம் ஏற்குபடியாக தெரிந்தாலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும் என்ற கணிப்பு கொஞ்சம் ஓவராகவே இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நல்ல அணியாக இருந்தாலும் இன்னும் உலக கோப்பையை வெல்லும் அளவுக்கோ அல்லது அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் அளவுக்கான வலிமை அவர்களிடம் இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். லாராவைத் தவிர இன்னும் சில முன்னாள் வீரர்களும் தங்களின் கணிப்பை வெளியிட்டுள்ளனர்.

கவாஸ்கர், ஆரோன் பிஞ்ச் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் காலிங்வுட் ஆகியோர் தங்களின் கணிப்பில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் டி20 உலக கோப்பையில் அரையிறுதி செல்லும் என தெரிவித்துள்ளனர். ஹெய்டன் மற்றும் டாம் மூடி ஆகியோர் தங்களுடைய கணிப்பில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளை சொல்லியிருக்கின்றனர். அம்பத்திராயுடு, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா செல்லும் என்றும், ஸ்ரீசாந்த், முகமது கைஃப் ஆகியோரை பொறுத்தவரை இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என கூறியுள்ளனர்.

மேலும் படிக்க | ரியான் பராகை காட்டிக் கொடுத்த history என்ன சிம்ரன் இது!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News