திமுக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்த அக்கட்சியின் வேண்டுகோள் குறித்து பரிசீலிக்கலாம் என்றும், எனினும் அவர்களுக்கு தருவதற்கு சீட் இல்லை? என்றும், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக-வுடன் கூட்டணி உடன்பாட்டை தேமுதிக எட்டிவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


முன்னாதக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள திமுக பொருளாளரும், தொகுதிப் பங்கீட்டுக் குழு தலைவருமான துரைமுருகன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. தேமுதிகவைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களான அனகை முருகேசன், மற்றும் இளங்கோவன் ஆகியோர், துரைமுருகனை சந்தித்துப் பேசினர். 


இந்நிகழ்வின் போது திமுக மூத்த தலைவர்கள் ஜெகத்ரட்சகன், எம்எல்ஏ காந்தி ஆகியோர் உடனிருந்தனர். இச்சந்திப்பினை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் இதுகுறித்து தெரிவிக்கையில்., தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக நிர்வாகிகள் பேசியதாக தெரிவித்தார்.


திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த துரைமுருகன், தன்னை சந்தித்த தேமுதிக நிர்வாகிகளிடமும் கொடுக்க சீட் இல்லை என்று தான் கூறியதாக தெரிவித்தார்.


மேலும் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்து தொகுதிகள் ஒதுக்கப்பட இருப்பதால், ஒரு தொகுதி கூட ஒதுக்க வாய்ப்பில்லை என தேமுதிக-வினரிடம் கூறியதாக, துரைமுருகன் தெரிவித்தார்.