தமிழகத்தில், கடந்த மே மாதம் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) உச்சத்தில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள், நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின்சார் மீட்டர்  கணக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனை அடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு செலுத்திய மின் கட்டணத்தையே செலுத்துமாறு தமிழக மின் வாரியம் அறிவித்தது. இதனால், பல குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில், மக்களே தங்களது வீடுகளில் மின்சார மீட்டரில் உள்ள ரீடிங்கை கணக்கீடு செய்து, அது குறித்த தகவல்களை மின் வாரியத்திற்கு அனுப்பலாம் என கூறப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு  மாதங்களுக்கான மின் கட்டணம் கணக்கிடப்பட்டு  2 ஆக பங்கிட்ட பின்னர்,  இலவச மின்சார அளவு கழிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதனால் ஜூலை மாதத்திற்கான மின்சார கட்டணம் இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வந்திருப்பதாக புகார்கள் அதிகம் வந்துள்ளன. முன்னதாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்சார பயன்பாடு கணக்கிடும் முறை மாற்றி அமைக்கப்பட்டு மின்சார பயன்பாடு, மாதம் தோறும் கணக்கிடப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. 


ALSO READ | AC: மின்சார கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க சில டிப்ஸ்

ஆனால் அந்த முறை இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இப்போது ஜூலை மாதத்திற்கான மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நபருக்கு ₹6 ஆயிரத்துக்கும் அதிகமான அளவில்மின்கட்டணம் வந்திருப்பதாக புகார் எழுந்ததுள்ளன. 


இது குறித்து கருத்து தெரிவித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிகம் அளவிலான மின் கட்டணம் வந்துள்ள பயனாளரின் மின் இணைப்பு எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவான தகவல்கள் கொடுக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


ALSO READ | மத்திய அரசின் புதிய மசோதா; இனி மின் தடைக்கு இழப்பீடு கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR