செப்டம்பர் மாதம் 22-ம் தேதி தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டு, 74 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு பலன் இன்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மருத்துவமைனையில் இருந்த நாட்களில் இட்லி சாப்பிட்டதாகவும், ஆப்பிள் சாப்பிட்டதாகவும், டாக்டர்கள், நர்சுகளிடம் பேசியதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாயின. அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் அதிமுக மூத்த தலைவர்கள் கூறினார்கள்.


ஆனால் டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் இதயம் திடீரென்று செயல் இழந்ததாகவும், இதனால் அவர் மரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு தரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சைகள் எழுந்தன. இதனால் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி அரசு ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. 


இந்த விசாரணை ஆணையத்திற்கு 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதன்பின்னர் மீண்டும் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியதையடுத்து, மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. 


ஆனால் பல்வேறு காரணங்களை கூறி விசாரணைக்கு ஆஜராகாமல் 5 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் காலம் தாழ்த்தி வந்தார். இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். மேலும், சசிகலா உறவினர் இளவரசியும் நாளை காலை 10 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | ஜெயலலிதா மரணம்: வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR