அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் இலவச பேருந்து அட்டை வழங்கப்படும் வரையில், அவர்களை அரசு பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவருக்கும் சுற்றறிக்கை வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்ப்பதில் எந்தவித தடையும் இருக்கக்கூடாது என்று பல திட்டங்களை வகுத்து, பல்வேறு வழிகளில் தமிழக அரசு உதவி செய்து வருகிறது. அதில் ஒன்று இலவசப் பேருந்து பயண அட்டைகள். இந்த பேருந்து பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்க வேண்டிய இலவசப் பேருந்து பயண அட்டைகள் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு கிடைக்கவில்லை. 


இதற்க்கான காரணம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு "ஸ்மார்ட் கார்டு" வடிவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இதனால் இலவசப் பேருந்து பயண அட்டைகள் வழங்குவதில் தாமதம் ஏற்ப்பட்டு உள்ளது.


இதனையடுத்து, இலவசப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படதா பள்ளி மாணவ-மாணவிகள் சீருடையிலும், கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களின் கல்லூரி அடையாள அட்டை வாயிலாக பேருந்தில் பயணம் செய்யலாம். அதற்க்கான அனுமதியை நடத்துநர், ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.