திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதி பெற்றவரா என ஆராயுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர், ஆகியோரை ஆதரித்து பெரம்பூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தான் செல்லுமிடமெல்லாம் கூடும் கூட்டம் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாகக் கூறினார். தேர்தல் நடக்காமல், வாக்கு எண்ணாமல் திமுக வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார். 


வேட்பாளர் தகுதியானவரா என்று விமர்சிக்கலாமே தவிர, யாருடைய மகன் என ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம் என அவர் குறிப்பிட்டார். தி.மு.க. ஆட்சியில் பாலம் கட்டியதில் ஊழல் என்று குற்றம் சாட்டிய அ.தி.மு.க.வால் அதை நிரூபிக்க முடியவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார். 


புயலால் பாதிக்கபப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சார் தாமதமாகச் சென்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பிரதமர் நரேந்திரமோடி, திட்டங்களுக்கு அடிக்கல் மட்டுமே நாட்டுகிற பிரதமராக இருப்பதாகவும் மோடி, அமித்ஷாவிடம் அடகு வைக்கப்படும் பொருளை மீட்க முடியுமா? மு.க.ஸ்டாலின் விமர்சித்தார். 


மேலும், திமுக நிறுத்தும் வேட்பாளர் தகுதி பெற்றவரா என ஆராயுங்கள், ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டாம். நான் தான் கடவுள் எனக்கூறும் முதல்வர் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளார். அதிமுக ஆட்சி கோமா நிலைக்கு சென்றுவிட்டது; தரக்குறைவாக பேச கருணாநிதி எங்களுக்கு கற்றுக்கொடுக்கவில்லை என அவர் தெரிவிவ்த்துள்ளார்.