திருச்சிராப்பள்ளி: கொரோனா தொற்று உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. பலர் இத்தொற்றுக்கு ஆளாகி, அதனுடன் போராடி வருகின்றனர். உடலளவில் அனைவரும் உறுதியுடன் இருப்பது அவசியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் மன வலிமையும்,  நேர்மறை சிந்தனையும், தொற்று நமக்கு வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி வெற்றி காணலாம் என்ற நம்பிக்கையும் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இது இல்லாமல் பலர் அச்சத்தின் காரணமாக தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். பரபரப்பால் பீதி அடைந்து உயிர் போன பரிதாபங்கள் கூட நிகழ்ந்துள்ளன. அப்படிப்படட் ஒரு சம்பவம்தான் பட்டுக்கோட்டை அருகே நடந்தது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பட்டுகோட்டை (Pattukottai) அருகே சூரப்பள்ளத்தைச் சேர்ந்த 45 வயதான விவசாயி ஒருவர் தனது 12 வயது மகனுடன் கொரோனா (Corona) பரிசோதசோதனை செய்துகொண்டதை அடுத்து, இருவரது சோதனை முடிவுகளும் நேர்மறையாக வந்தன. இதன் பின்னர், ஞாயிறன்று இருவரும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இதனால் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட அந்த நபரின் மனைவி மயக்கமடைந்தார். உடனடியாக அவர் பட்டுகோட்டை ஜி.எச். க்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார்.


சுகாதார அதிகாரிகள் அவரது மாதிரிகளையும் எடுத்துள்ளனர். அவரது கணவரும் மகனும் இறுதி சடாங்குகள் செய்யப்பட வெண்டும் என்று கோரியுள்ளனர். இறந்த பெண்ணின் தாயும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 6,993 பேருக்கு கொரோனா உறுதி..!


இப்படிப்பட்ட சம்பவங்கள் மன வேதனையை அளிக்கின்றன. கொரோனா தொற்று என்பது அச்சப்பட வெண்டிய விஷயமல்ல.  வரும் முன் காப்பது உசிதம். அதையும் மீறி நம்மை தொற்று ஆட்கொண்டால் அதை மீறி போராடி வெற்றி காண முடியும் என்ற நம்பிக்கையை நாம் அனைவரும் உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.


ALSO READ: COVID-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: புதுவை முதல்வர்