நெய்வேலி அருகே பெண் ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் பின்னர் ஏற்பட்ட தகராறில் தங்கள் கூட்டாளியையும் கொலை செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முலுக்க எந்த திசை திரும்பினாலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, கொள்ளை, கொலை என பல அநீதிகள் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், நெய்வேலி அருகே பெண் ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த 5 பேர் கொண்ட கும்பல் பின்னர் ஏற்பட்ட தகராறில் தங்கள் கூட்டாளியையும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடலூர் மாவட்டம் நெய்வேலிப் பகுதியைச் சேர்ந்தவர் மாயாவதி என்ற பெண். கணவரை இழந்த இவர் தனது நண்பர் சுரேந்தர் என்பவரோடு இரு சக்கர வாகனத்தில் நெய்வேலிப் பகுதியில் சென்றுள்ளார். அப்போது அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல், கத்தியை காட்டி மிரட்டி சுரேந்தரை அங்கிருந்து துரத்திவிட்டனர். பின்னர் மாயாவதியை அங்குள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றனர்.


அங்கு வைத்து 5 பேரும் மாயாவதியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். அப்போது மயக்கமான அவரை ஏரிப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கும் பலாத்காரம் செய்துள்ளனர். அதன் பின்னர் மாயாவதியை ஊரில் கொண்டு விடுவது தொடர்பாக நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பிரகாஷ் என்பவரை மற்ற நால்வரும் வெட்டிக் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் 4 பேரும் தலைமறைவாகியுள்ளனர்.


இதற்கிடையில் மாயாவதி  நெய்வேலி தெர்மல் போலீசில் இதுபற்றி புகார் செய்ய போலிஸார் விசாரணையில் கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, சிவபாலன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரகாஷைக் கொலை செய்ததை ஒத்துக் கொண்டுள்ளனர். புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரை எஸ் கார்த்திக் (23), எம் சதீஷ்குமார் (23), சி ராஜதுரை (25), ஏ சிவபாலன் (22) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்ட ஐந்தாவது நபர் எம் பிரகாஷ் (26) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தினசரி கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றும் ஐந்து பேரும் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.