பூட்டை உடைக்கவும் இல்லை, சத்தம் கேட்கவும் இல்லை... பட்டப்பகலில் அசால்டாக கொள்ளையடித்த பெண்!
கோவை அருகே துக்கம் விசாரிக்க உறவினர் வீட்டிற்குச் சென்றவரின் வீட்டை நேரம் பார்த்து கொள்ளையடித்த பெண்ணை போலீஸார் லாவகமாக பிடித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் காட்டம்பட்டியில் கிரிகதிர்வேல் (வயது 54) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது தூரத்து சொந்தகாரர் வீட்டில் ஒருவர் தவறியதால் துக்க காரியத்துக்காக தன் குடும்பத்துடன் கிரிகதிர்வேல் கிளம்பி சென்றுள்ளார்.
காலை சென்ற குடும்பத்தினர், அன்று மாலையே திரும்ப வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு தான் இருந்துள்ளது. உள்ளே சென்று பார்க்கையில் பிரோ காலியாக இருந்துள்ளது.
பின்னர் அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை பணம் என்னவாயிற்று என்று தேடி பார்த்தனர். ஆனால் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கிரிகதிர்வேல் புகார் அளித்ததின் பேரில் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாருக்கு கதவு உடைக்கப்படாமல் உள்ளே கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் சந்தேகத்தை தந்தது.
மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை
பின்னர் அப்பகுதி மக்களிடம் வழக்கத்திற்கு மாறாக அவ்வழியாக யாரேனும் வந்து சென்றார்களா என விசாரித்தனர். இந்த விசாரணையில் அருகில் உள்ள கோழிப் பண்ணையில் பணியாற்றும் பெண் ஒருவர் வந்து சென்றது தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து கோழிப் பண்ணையில் பணியாற்றி வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ரேவதி (வயது 32) என்பவரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
அப்போது முன்னுக்கு பின் முரணாக ரேவதி பதில் அளித்ததால், அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அதிர்ச்சிகரமாக அப்பெண் தங்கியிருந்த இடத்தில் 14 சவரன் நகை மற்றும் 4 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்துள்ளது. இதை தொடர்ந்து உரிமையாளரிடம் நகையின் அடையாளம் கேட்டு ஒப்பிடப்பட்டது.
பின்னர் வசமாக சிக்கிய ரேவதி தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலத்தில், கிரிகதிர்வேல் குடும்பத்துடன் வெளியே சென்றதைப் நோட்டமிட்டதாகவும், அவர்கள் வழக்கமாக சாவியை வைக்கும் இடமான வீட்டின் முன்பு இருக்கும் வாஷிங் மெஷினில் இருந்த சாவியை எடுத்து, கதவைத் திறந்து பீரோவில் இருந்த பணம் மற்றும் 14 சவரன் நகையை திருடியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீசார் ரேவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR