சவுக்கு சங்கரை எதிர்த்து பெண்கள் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டம்! ஏன் தெரியுமா?
சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
கோவை சிறையில் இருந்து திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நூற்றுக்கு மேற்பட்ட பெண் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணி ஈடுபட்டிருந்தனர். காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் ஏற்கனவே சவுக்குசங்கரை காவல்துறையினர் தேனியில் வைத்து கைது செய்தனர். அதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை நேர்காணலை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் இணையதளத்தில் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த 10ம் தேதி இரவு டெல்லி கைது செய்யப்பட்டு திருச்சி நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாவட்ட, முசிறி டிஎஸ்பி யாஸ்மீன் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது மாவட்ட சைபர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
இந்த வழக்கில் ஆஜர்படுத்தப்படுவதற்காக இன்று காலை கோயம்புத்தூரில் இருந்து சவுக்கு சங்கரை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரை நீதிபதி ஜெயப்பிரதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதன் காரணமாக நீதிமன்றம் முழுவதும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும் குறிப்பாக நூற்றுக்கு மேற்பட்ட பெண் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் சவுக்குசங்கர் நீதிமன்றத்தில் அழைத்து வரப்பட்ட போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமூகத்தில் உள்ள பெண்களை அவதூறாக பேசி வரும் சவுக்குசங்கர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
மேலும் ஒரு வழக்கு
ஆரம்பத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், யூடியூப் தளத்தில் முத்துராமலிங்கத் தேவர் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது கோவை போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவினரிடைய கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும் படிக்க | மீண்டும் சவுக்கு ஷங்கர் மீது வழக்கு பதிவு! இந்த முறை என்ன வழக்கு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ