திருச்செந்தூர் அருகே உள்ள நயினார்பத்து பகுதியை சேர்ந்த விஜயா (26) . இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். பட்டபடிப்பு படிக்க செல்லும்போது திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரம் மருதூர் கரையைச் சேர்ந்த திருமணிகுட்டி என்பவர்  விஜயாவை ஓர் ஆண்டுகளாக பின் தொடர்ந்து தீவிரமாக ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து திருமண குட்டியின் காதலை ஏற்றுக் கொண்ட விஜயாவும் திருமணி குட்டியை காதலிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் விஜயாவை தருமணிகுட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து தாலி கட்டி ரகசிய திருமணம் செய்துள்ளார். 


மேலும் நாம் திருமணம் செய்து கொண்டதை யாரிடம் சொல்லக்கூடாது என்று விஜயாவிடம் சத்தியம் பெற்றுள்ளார். தன்னை தீவிரமாக காதலித்த காதலன் மீது நம்பிக்கை கொண்ட விஜயா இதுபற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். திருமணம் முடித்ததும் திருமணி குட்டி விஜயாவும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இருவரும் வீட்டிற்கு தெரியாமல் இருந்து வந்துள்ளனர். தொடர்ந்து தொலைபேசியில் பேசியும் வந்துள்ளனர்.


ALSO READ | Harassment: பாலியல் தொல்லை தொடர்பாக தலைமை ஆசிரியை & ஆசிரியர் கைது


இந்த நிலையில் விஜயாவிற்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் விஜயா தான்  காதலிப்பது பற்றி  வீட்டிற்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனைஅடுத்து விஜயா குடும்பத்தினர் திருமணி குட்டியிடம் காதல் விவகாரம்  பற்றி கேட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த திருமணிகுட்டி  விஜயாவிடம் நாம் காதலிப்பது யாருக்கும் சொல்லக்கூடாது என்று தெரிவித்தேன் எப்படி வீட்டில் சொல்லலாம் என கூறி விஜயாவை திருமணம் செய்ய முடியாது என தவிர்த்து வந்துள்ளார். 


இதனால் விஜயா குடும்பத்தினர் விஜயாவை அடித்து வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டனர்.  குடும்பத்தினர் கைவிட்ட நிலையில் விஜயா திருமணி குட்டியிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். ஆனால் திருமணி குட்டியோ விஜயாவிற்கு அடைக்கலம் கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளார்.  இதனால் விஜயா திருமணிகுட்டி வீட்டிற்கு சென்று முறையிட்டுள்ளார். ஆனால் திருமணி குட்டி இவரை கண்டு கொள்ளவில்லை என்பதால் விஜயா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீசார் இருவரையும் அழைத்து பேசி உள்ளனர். 


ALSO READ | காரைக்குடி மாணவிக்கு பாலியல் தொல்லை; 3 பேர் Pocso வழக்கில் கைது


ஆனால் திருமணி குட்டி தொடர்ந்து திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் திருமணி குட்டிக்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவல்  தெரிந்த விஜயா இன்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இன்று விஜயா காதலன் திருமணிகுட்டி வீட்டின் முன்பு கொட்டும் மழையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து தகவல் தெரிந்த மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.


READ ALSO | நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR