என் உயிருக்கு ஆபத்து என அன்னபூரணி அம்மா போலீசில் புகார்!
தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் ஆபத்து என அன்னபூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் ஆபத்து என மேல்மருவத்தூர் அன்னபூரணி அரசு அம்மா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திடீர் சாமியாக அன்னபூரணி அம்மா மக்களுக்கு அருள் வாக்கு வழங்கி வந்தார். இவரை பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அடுத்து இவரின் கடந்த கால வாழ்க்கையும் வெளிவர தொடங்கின. சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ALSO READ | கொதித்தெளுந்த அன்னபூரணி அம்மா! விரைவில் செய்தியாளர் சந்திப்பு!
அன்னப்பூரணி அம்மாவிற்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. செங்கல்பட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த அன்னபூரணி அம்மா அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை எச்சரித்த காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். மேலும், இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதில், அன்னப்பூரணி அரசு அம்மா என்ற பெயரில் நான் ஆதிபராசக்தி என்று கூறி இந்து மதத்திற்கு விரோதமாக செயல்பட்டு வரும் பெண்மணி மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடந்த சில தினங்களாக பேஸ்புக் பக்கத்தில் அன்னப்பூரணி என் மீது தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது என்று பதிவு செய்து கொண்டிருந்தார். இந்நிலையில், "என்னை பற்றி அவதூறு பரப்புகிறார்கள், என் ஆன்மீக சேவையை தடுக்க பார்க்கிறார்கள். தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் ஆபத்து என அன்னபூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார். ஆன்மிக சேவையில் தான் ஈடுபடக்கூடாது என்று மிரட்டல் வருகிறது. மிரட்டல்களால் தனது ஆன்மிக சேவை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. தன்னையும் தனது ஆன்மிக சேவை பற்றியும் இணையத்தில் தவறாக தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு தவறான தகவல் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது கணவர் மாரடைப்பால் மரணமடைந்ததை மர்மமரணம் என தவறாக தகவல் பரப்பப்படுகிறது. வாட்ஸ்-அப் மூலமும், செல்போன்கள் மூலமும் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன. தனது உயிருக்கு ஆபத்து என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னப்பூரணி புகார் அளித்துள்ளார்.
ALSO READ | அம்மாவை பற்றி எல்லை மீறி தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக புகார்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR