குடும்ப தலைவிகளுக்கு தமிழக அரசு கொடுக்கும் ரூ. 1.25 லட்சம்! எப்படி பெறுவது?

தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் சிறப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஒன்று பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ 50,000 வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மக்களுக்கு குழுக்கடன் வழங்கி உதவி வருகிறது. அதாவது சுயஉதவி குழுவில் (SHG) இணைந்து பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் குழு கடன் வாங்கலாம். ஒவ்வொரு குழுவும் 1.25 லட்சம் ரூபாய் வரை பெறலாம், மேலும் அனைத்து குழுக்களின் மொத்தத் தொகை 15 லட்சம் ரூபாய் ஆகும். கடன் பெற்றவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் 6 சதவிகிதம் வட்டியில் பணத்தைத் திரும்பச் செலுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் 20 உறுப்பினர்கள் வரை இருக்கலாம், மேலும் அவர்கள் கடனைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு குழு செயல்பட்டு இருக்க வேண்டும்.
கடன் பெறுவதற்கான தகுதிகள் என்ன?
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பாக குழுக்கடன் பெறுவதர்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் கடன் பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆக இருக்க வேண்டும். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களின் வயது 18 முதல் 60 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 நபர்கள் குழுவில் இருக்க கூடாது. கடனுக்கு விண்ணப்பிக்க சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பிறப்பிடச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் குழுக்கடனுக்கு விண்ணப்பிக்க www.tabcedco.tn.gov.in. என்ற தளத்தில் பதிவு செய்யலாம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கான திட்டங்கள்
தமிழகத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் சிறப்பு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் ஒன்று பெண்கள் சுயதொழில் தொடங்க ரூ 50,000 வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனடைய விண்ணப்பங்களை அரசு பெற்று வருகிறது. இந்த திட்டம் தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு சுயத்தொழில் தொடங்க ரூ. 50,000 வழங்கப்படும். மேலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, அவர்கள் தங்கள் பகுதியில் உள்ள சமூக நல அலுவலரிடம் சென்று உதவி பெறலாம்.
மேலும் படிக்க | சீமான், பாஜக-வின் கொள்கை பரப்பு செயலாளரா? - திருமாவளவன் கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ