ஆட்சியர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்; தென்காசியில் பரபரப்பு!
தென்காசியில் கணவர் 2வது திருமணம் செய்த நிலையில் அவருடன் சேர்த்து வைக்கக் கோரி குழந்தையுடன், பெண் ஆட்சியர் வளாகத்தில் தீ குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, இவரது மனைவி துரை மீரா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சாகுல் ஹமீது 2வது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரி துரை மீரா தன் மகளுடன் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின் போது தனது உடலில் மண்ணெண்னையை ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பாய்ந்து சென்று அவரை தடுத்து நிறுத்தி தலையில் தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். இது குறித்து தென்காசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து துரை மீரா கூறுகையில், தனக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆவதாகவும், கணவர் வெளிநாடு சென்று வேலை செய்து வந்தார். தற்போது மூன்று வருடங்களாக தென்காசியில் பணிபுரிகிறார். இந்நிலையில் நகை பணங்கள் என வரதட்சணை கொடுத்த நிலையிலும், மேலும் கேட்டு மாமியோரோடு சேர்த்து கணவர் தன்னை கொடுமை செய்து வருகிறார். மேலும் இது குறித்து புளியங்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் படிக்க | கோவை கார் வெடிப்பு சம்பவம் - காவலர்களுக்கு முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ்
இந்நிலையில் தான் குழந்தை பிறந்த நிலையில் அழகாக இல்லை என்று கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். எனவே தனது பிள்ளையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என தெரிவித்தார்.வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண் மண்ணெண்ணெய் கேனுடன் வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்ற சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | ஜூஸில் ஆசிட்... காதலனை கொன்ற காதலி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி
மேலும் படிக்க | கோவை போலீசாரை பாராட்டி குட்டும் பாஜக அண்ணாமலை: செய்தியாளர் சந்திப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ