ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள பங்களாபுதூர் காவல்நிலையம். வழக்கம் போல போலீசார் தங்களது வேலை தொடங்கி நேரத்தில் மூச்சிரைக்க ஒருவர் புகாரளிக்க வந்து நின்றார். என்ன நடந்தது என அவரிடம் விசாரித்தபோது பெரிய அசம்பாவிதம் நடக்கப்போவதை போலீசார் உணர்ந்தார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படி என்ன நடந்தது அவருக்கு.....கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நஞ்சை புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஆம், மூச்சிரைக்க ஓடி வந்தது ராஜேந்திரன்தான். கூலி வேலை பார்த்து வரும் ராஜேந்திரனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரால் சின்ராஜ் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகம் கிடைத்த கையோடு, சின்ராஜ் தன்னுடைய வேலையை ராஜேந்திரனிடம் காட்டியிருக்கிறார்.



‘பச்சை நிறமுடைய சுலைமான் கல்... அதுவும் ஆகாயத்திலிருந்து விழுந்த சுலைமான் கல் அப்படி ஒரு அதிசய கல் கிடைத்தால் எப்படி இருக்கும்..இதே ஆசையைத்தான் ராஜேந்திரனுக்கும் ஊட்டினார், சின்ராஜ். அந்த சுலைமான் கல்லை யார் வைத்திருந்தாலும் அவர்களுக்கு நல்ல யோகம்தான். கல்லைப்போலவே காசும் ஆகாயத்திலிருந்து கொட்டோ கொட்டு என்று கொட்டும். உடல் ஆரோக்கியம் சொல்லவே தேவையில்லை. அதிசய கல்லை யார் வைத்திருந்தாலும் உடலை கத்தியால் வெட்டினாலும் ரத்தம் வராது ; காயமும் ஏற்படாது. இப்படியெல்லாம் சொல்லி முடித்து பெருமூச்சுவிட....


ஆஹா அப்படியொரு கல் இருக்கிறதா ? என்று ராஜேந்திரன் மெய்சிலிர்த்துப்போனார். அவ்வளவுதான் அடுத்தென்ன... உடனே பச்சை நிறமுள்ள சுலைமான் கல்லை பார்க்க ராஜேந்திரன் ஆசைப்பட்டிருக்கிறார். ஆனந்த குமாரும், சின்ராஜூம் டி.என்.பாளையம் ஏரியாவுக்கு வந்தால் அந்த அதிசய கல்லை காட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூறியதை நம்பிய ராஜேந்திரன் தனது நண்பர் செந்தில்குமாரை அழைத்துக்கொண்டு பச்சை நிற அதிசய சுலைமான் கல்லை பார்ப்பதற்காக டி.என்.பாளையம் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டு இருந்த 8 பேர் கொண்ட கும்பல், ராஜேந்திரனிடம் பச்சை நிற சுலைமான் என்ற ஒன்றைக் காட்டினார்கள். காட்டியதோடு மட்டும் விட்டுவிடாமல் பேரம் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.



10 லட்சம் .. உங்களுக்காக 8 லட்சத்திற்கு கொடுக்கிறோம் என்று கருணை கண்ணை விரித்திருக்கிறார்கள். எல்லாம் சரி.... நிஜமாகவே அது உண்மையான சுலைமான் கல் என்றால் எதற்காக அதை விற்க நினைப்பார்கள் என்ற கேள்வி ராஜேந்திரனின் மனதை தட்டி எழுப்பியது. ஆம், அது சுலைமான் கல் இல்லை, ஊரோரம் கிடக்கும் சுண்ணாம்புக் கல். கலரடித்து கைவரிசை காட்ட நினைத்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க | 3 பேரை காரில் கடத்திய கும்பல் - '36 மணி நேரத்தில்' அதிரடி காட்டிய தனிப்படை போலீசார்


உடனே அங்கிருந்த நழுவ முயற்சித்தவரை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். எப்படியோ ஒரு வழியாக அடிபடாமல் தப்பித்து சென்ற ராஜேந்திரன், பங்களா புதூர் காவல் நிலையத்திற்கு உண்மையை ஒப்பித்தார். அதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாகூர் அனிபா மற்றும் அவனுடைய கூட்டாளிகளான  8 பேரையும் பங்களாபுதூர் போலீசார் கூண்டோடு கைது செய்தனர். போலியான கல்லை வைத்து ஆகாயத்தில் இருந்து விழுந்த சுலைமான் கல் என்று டூபாக்கூர் வேலையை காட்டியதை உறுதிப்படுத்திய போலீசார் 8 பேரையும் சிறையில் அடைத்தனர். அவர்கள் 8 பேர்தான் இவர்கள். உஷாராக இருங்க மக்களே....


மேலும் படிக்க | தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் ‘தில்லாலங்கடி திருடன்’


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR