சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் கீழடி கிராமத்தில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம்  அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், தற்போது கீழடியில் விளைநிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக தோண்டிய குழியில் உறைகிணறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழடியில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இதில் 3 கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல்துறையும், கடைசி 4 கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல்துறையும் மேற்கொண்டன. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் நடந்து வந்த 7ம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது.


மொத்தம் 7 கட்ட அகழாய்வு மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஏராளமான உறைகிணறுகளும் கண்டறியப்பட்டன. இதன்மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் தமிழ்நாட்டின் கீழடியில் இருந்தது தெரியவந்தது.


Also Read | கீழடி அகழாய்வு: 5 கட்ட அறிக்கைகளை அரசு வெளியிடுவதில் தாமதம் ஏன்?


இந்நிலையில், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள விவசாய நிலங்களில் (Agriculture Field) தண்ணீர் தேங்கியிருந்தது. அறுவடை செய்வதற்காக, விளைநிலத்தில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்ற 7 அடி ஆழத்தில் விவசாயிகள் குழி தோண்டினார்கள். 


அப்போது அந்தக்  குழியில் உறைகிணறு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவானந்தம் உத்தரவின் பேரில், தொல்லியல் அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டனர்.



விளைநிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றிய பிறகு, குழியை ஆழப்படுத்தி, உறைகிணற்றின் உயரத்தை அறிய தொல்லியல்துறையினர் முடிவு செய்துள்ளனர். கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வில்  கண்கெடுக்கப்பட்டுள்ள பொருட்கள் ‘உலகின் மூத்த நாகரிகம் தமிழ் நாகரிகம்’ என்பதை நிரூபிக்கத் தேவையான அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்த நிலையில், புதிய கண்டுபிடிப்புகள் உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.


கீழடியில் கிடைத்துள்ள தங்கக் காதணிகள், கல்லால் உருவாக்கப்பட்ட உழவு கருவி, இரும்பு ஆயுதம், உறைகிணறு உள்ளிட்டவை தற்போதும் பயன்படுத்தக்கூடிய நவீன பயன்பாடு கொண்டவை என்பதும் குறிப்பிடத் தக்கது.


கீழடியில் கிடைத்துள்ள ஓடுகள் 2600 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பானது என்று நம்பப்படுவதால், தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு தமிழர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கலாம் என்ற நம்பிக்கை விரைவில் நிரூபிக்கப்படக் கூடும்.


Read Also | கீழடி உண்மையை மறைப்பதுதான் ஒன்றிய அரசின் எண்ணம் - கார்த்தி சிதம்பரம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR