சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை திறப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்க்கான பணிகள் தற்போது துவங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் கொண்டாட அதிமுகவினர் உள்ளனர். இந்நிலையில் அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலை திறக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் கட்சி தலைமை தீவிரம் காட்டி வருகிறது.