பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 14 ஆம் தேதி விடுமுறையளித்து தமிழக அரசு உத்தரவு....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி திருநாளைவிட பொங்கல் பண்டிகைக்குத்தான் தமிழ்நாட்டில் மவுசும் மதிப்பும் அதிகம். பொங்கல் விழாவிற்கு தமிழர் திருநாள் என்றும் கூறுவார். சோழர்கள் காலத்தில் இவ்விழா ‘புதியீடு’ என்கிற பெயரால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஆண்டு தோறும் பொங்கல் திருநாளுக்கு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழ் மக்களுக்கு தமிழக முதலவர் பொங்கல் பரிசை தமிழக அரசு அறிவித்தது. 


அதில், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. 


இந்நிலையில், தமிழக மக்களுக்கு மேலும் ஒரு பெரிய அதிர்ச்சி பரிசை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, வரும் 15, 16, 17 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. வார இறுதியை தொடர்ந்து, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும், ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டியிருந்தது. 


இந்த நிலையில், 14 ஆம் தேதி போகி அன்றும், அரசு விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 14 ஆம் தேதி விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, 9 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.